முகப்பு > மரண அறிவித்தல்கள் > விநாயகமூர்த்தி ஞானச்செல்வி

திருமதி. விநாயகமூர்த்தி ஞானச்செல்வி

(யாழ்ப்பாண தேசிய கல்வியியற்கல்லூரி விரிவுரையாளர்)

தோற்றம்: 01/07/1971 - மறைவு: 30/05/2020

மாதகல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், அல்வாய் வட மேற்கு திக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி ஞானச்செல்வி அவர்கள் 30/05/2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
 
மாதகல் கந்தஞானியார் தங்கம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற  வேலுப்பிள்ளை நகப்பூசணியம்மா  தம்பதிகளின்  மருமகளும், காலம்சென்ற அமரர்  விநாயகமூர்த்தி (முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், சனந்தன் (2 ஆம் வருட மாணவன் பொறியியல் பீடம், SLTC), சிவேந்தம் பூரணி (மாணவி, யா/வேம்படி உயர்தர பாடசாலை), வித்தியாபூசணி (மாணவி யா/இந்து மகளீர் கல்லூரி)  ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
 
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை (01/06/2020) காலை 8.30 மணி அளவில் 36/05, பலாலி வீதி, திருநெல்வேலியில் (அன்னாரின் அண்ணா வீடு) இடம்பெறும்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்.


Back to Top