முகப்பு > மரண அறிவித்தல்கள் > பரமேஸ்வரி காசிராசலிங்கம்

திருமதி. பரமேஸ்வரி காசிராசலிங்கம்

தோற்றம்: 30/09/1942 - மறைவு: 28/09/2020

உடையார் விநாயகமூர்த்தி வள்ளியம்மை இணையரின் மூத்தமகள் திருமதி. பரமேஸ்வரி காசிராசலிங்கம் அவர்கள் 28-09-2020 இன்று காலமாகிவிட்டார்.
 
அவர் பண்டிதர் இராமலிங்கம் செல்லமுத்து இணையரின் மூத்தமகன் காசிராசலிங்கம் (ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் துணைவியாவார்.
 
ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்), யோகலிங்கம், அமரர் ஞானலிங்கம், இந்திரலிங்கம், கோமளாதேவி ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
 
சத்தியபாமா, இந்திராவதி, சிவப்பிரகாஸ் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
 
ஆரணி, விக்கினேஸ், கிருஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
 
அன்னாரின் வீட்டில் நாளை (29/09/2020) மதியம் 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் இடம்பெற்று மாதகல் இந்து மயானத்தில் (போதி, கடற்கரை) தகனம் செய்யப்படும்.
 
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர், எல்லோரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவோடு தெரிவிக்கிறோம்.
 
இவ்வண்ணம்
பிள்ளைகள், மருமக்கள்


Back to Top